Wednesday, 11 June 2014

உலக கோப்பை கால்பந்து: கலக்கப்போகும் 10 வீரர்கள்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/06/2014
fifa-world-cup-2014-brazil-hd-wallpapers-free-1402140915ரியோடி ஜெனிரோ: 12ம்தேதி துவங்க உள்ள உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் 32 நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றாலும்கூட அதில் உலகளாவிய அளவில் திக ரசிகர்களை பெற்றவர்கள்இ சிறந்த விளையாட்டு வீரர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் டிவி மீது விழிவைத்து காத்திருப்பார்கள். அதுபோன்ற பத்து ரத்தினங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.


அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்சி
Messi
அர்ஜெண்டினா நாட்டுக்காரரான இவர் முன்வரிசை பொசிசனில் வல்லவர். 26 வயதான மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக 84 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார். 2006, 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். உலக கோப்பை ஆட்டங்களில் மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்துள்ளார். இம்முறை இவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்.
போர்ச்சுக்கல் ரொனால்டோ
cristianoronaldo
போர்ச்சுக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பார்வேர்டு கள ஆட்டக்காரர். 29 வயதான ரொனால்டோ தனது நாட்டுக்காக 110 போட்டிகளில் விளையாடி 49 கோல்களை அடித்துள்ளார். 2006 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் உள்ள இவர் அந்த போட்டிகளில் மொத்தம் 2 கோல்கள் போட்டுள்ளார்.
உள்ளூர் சிங்கம் நெய்மார்
neymar
போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டுக்காரரான 22வயது நெய்மார் மீது உள்ளூர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளனர். நாட்டுக்காக 49 போட்டிகளில் ஆடிய அவர்இ 31 கோல்களை போட்டுள்ளார். இதுதான் நெய்மாருக்கு முதல் உலக கோப்பை அனுபவமாக இருக்கப்போகிறது.
இங்கிலாந்து கிங் ரூனே
waynerooney
இங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன் ரூனே மற்றொரு முக்கிய வீரர். பார்வேர்டு கள ஆட்டக்காரரான இவர்இ தனது நாட்டுக்காக 91 போட்டிகளில் விளையாடி 39 கோல்கள் அடித்துள்ளார். 2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும் அந்தபோட்டித் தொடர்களில் கோல் எதுவும் போடவில்லை.
ஸ்பெயின் நட்சத்திரம் இனியேஸ்டா
andrea-iniesta
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியின் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா அந்த அணியின் தூண். நாட்டுக்காக 97 போட்டிகளில் விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார். 2006, 2010 உலக கோப்பைகளில் 7 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கான கோலை இவர்தான் அடித்து ஸ்பெயினை சாம்பியனாக்கினார்.
நெதர்லாந்தின் அர்ஜென் ரொப்பன்
10-1402402942-arjenrobben-600
கடந்த உலக கோப்பை ரன்னர்-அப் அணியான நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் அர்ஜென் ரொப்பன். 30 வயதான மிட்பீல்டரான இவர்இ தனது நாட்டுக்காக 75 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார். 2006 2010 உலக கோப்பைகளில் 8 போட்டிகளில் ஆடி 3 முறை பந்தை எதிரிநாட்டு கோல் கம்பத்துக்குள் தட்டியுள்ளார்.
இத்தாலி சேவைக்கு இவர் தேவை ஆண்ட்ரியா பிர்லோ
andrea-pirlo
இத்தாலி நாட்டு மிட்பீல்டரான ஆண்ட்ரியா பிர்லோ நாட்டுக்காக 108 போட்டிகளில் ஆடி 13 கோல் போட்டுள்ளார். 2006, 2010 உலக கோப்பைகளில் 8 பந்தையங்களில் களம் கண்ட இவர் 1 கோல் போட்டிருந்தார். இம்முறை இத்தாலி இவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.
உருக வைக்கும் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ்
luissuarez
1950 உலக கோப்பை பைனலில் பிரேசிலை தோற்கடித்து ஜாம்பவான் பீலே மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ். பார்வேர்டு கள வீரரான இவர் தனது நாட்டுக்காக 80 போட்டிகளில் விளையாடி 41 கோல்களை போட்டு அசத்தியுள்ளார். கடந்த உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் மிக்க அவர் 6 போட்டிகளில் 3 கோல்கள் விளாசினார். இரு போட்டிக்கு ஒரு கோல் என்பது இவரது சராசரியாக உள்ளது.
ஜெர்மனி மரியா
mario-gotze
ஜெர்மனி அணியின் 22 வயது மிட் பீல்டரான மரியோ கோட்ஸ் தனது அணிக்காக 29 போட்டிகளில் ஆடி 9 கோல்கள் அடித்துள்ளார். பிரேசில்தான் இவருக்கு முதலாவது உலக கோப்பை அனுபவத்தை கற்றுக்கொடுக்கப்போகிறது.
ஐவரிகோஸ்டின் யயா டூரே
yayatoure
ஐவரி கோஸ்ட் அணியின் மிட்பீல்டர் யயா டூரே தனது அணிக்காக 82 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் போட்டுள்ளார். 2006, 2010 உலக கோப்பைகளில் 6 போட்டிகள் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார்.
Kattankudy info

No comments:

Post a Comment