கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு செல்கள் பல்கிப் பெருகுவதால், தடுக்க இயலாத நோயாக இருக்கும் புற்றுநோயில் நூற்றிற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடலில் உள்ள செல்கள் அதி வேகமான எண்ணிக்கையில் பிளந்து பெருகுவதால் உருவாகும் கட்டிகளால், உடலிலுள்ள பிற பாகங்களின் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இவ்வாறாக வரும் புற்றுநோகை விளைவிக்கும் காரணிகள் பல, இவற்றை தடுக்கவும் முடியும் மற்றும் கட்டுப்படுத்தாமல் இருக்கவும் முடியும். புற்றுநோய்க்கான காரணங்களை தவிர்க்க முடியும் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளும் நாம், அந்நோய் மேற்கொண்டு வளருவதை தவிர்க்கவும் முடியும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடலில் உள்ள செல்கள் அதி வேகமான எண்ணிக்கையில் பிளந்து பெருகுவதால் உருவாகும் கட்டிகளால், உடலிலுள்ள பிற பாகங்களின் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. இவ்வாறாக வரும் புற்றுநோகை விளைவிக்கும் காரணிகள் பல, இவற்றை தடுக்கவும் முடியும் மற்றும் கட்டுப்படுத்தாமல் இருக்கவும் முடியும். புற்றுநோய்க்கான காரணங்களை தவிர்க்க முடியும் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ளும் நாம், அந்நோய் மேற்கொண்டு வளருவதை தவிர்க்கவும் முடியும்.
இந்நோய்க்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும வேறுபடுகின்றன. ஒருவர் வயிற்று புற்றுநோயால் அவதிப்படும் போது, மற்றொருவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார். எனினும், உலகளவில் பார்க்கும் போது இவற்றிற்கான காரணங்கள் ஒன்றாகவே உள்ளன. இந்த காரணங்களை கட்டுப்படுத்தும் வகைகளை அறிந்து கொண்டு நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அவற்றை அறிந்து கொள்ளவும், எப்படி கட்டுப்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளவும் மேற்கொண்டு படியுங்கள்.
1. எடையைக் கட்டுப்படுத்துதல்
அளவுக்கு அதிகமான எடையை கொண்டிருப்பதை யாரும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில்லை. இது உங்களை தொந்தரவு செய்வதுடன், கட்டுப்படுத்த இயலாதவராகவும் வைத்துள்ளது. உங்களுடைய எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து, ஆரோக்கியமான எடையை பராமரித்து வந்தால், புற்றுநோயால் தாக்கப்படும் அபாயத்தை பெருமளவு தவிர்க்க முடியும்.
2. ஆல்கஹால்
குடி குடியைக் கெடுக்கும். உடல் நலத்திற்கும் உலை வைக்கும். மதுப்பழக்கம் புற்றுநோய் வருவதற்கும் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. எனவே, மதுவை பெருமளவு விலக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து உங்களையும் விலக்கி வைக்கும்.
3. உப்பு
சாப்பிடும் உணவில் உப்பின் அளவை கட்டுப்படுத்தி வைப்பதன் மூலம் புற்றுநோயையும் கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் உணவில் உள்ள உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், வயிற்று புற்றுநோயையும் வர வைக்கும்.
4. கதிர்வீச்சு
புற்றுநோயை உருவாக்கும் காரணங்களில் ஒன்றாக கதிர்வீச்சு உள்ளது. தினமும் பல்வேறு காரணங்களுக்காக நாம் கதிர்வீச்சுகளால் தாக்கப்படுகிறோம், இதில் முதன்மையானது சூரியனிடம் இருந்து வரும் புறஊதாக் கதிர்களாகும். எனவே, தேவையற்ற வகையில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும், இயற்கைக்கு மாறான முறைகளில் கதிர்வீச்சுகளை எதிர் கொள்வதையும் தவிர்க்கவும்.
5. தொற்றுகள்
ஹியூமன் பாபிலோமாவைரஸ் என்ற வைரஸ் பலருக்கும் புற்றுநோய் கதவை திறந்து விடும் கருவியாக உள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள், ஹெலிகோபேக்டர் பைரோலி என்ற அடுத்த நிலைக்கு சென்று விடுவார்கள். இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்கள் உடனடியாக மாற்று மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி
உப்பிட்ட பன்றியின் தொடை, பன்றி இறைச்சி, சாசேஜ்கள் மற்றும் வெள்ளை பூண்டு மணம் கொண்ட இத்தாலிய உணவு வகைகள் ஆகியவை புற்றுநோய் காரணங்களை அதிகரிக்கும் திறன் கொண்டவையாகும். இது புற்றுநோயை அதிகபடுத்தும் காரணங்களில் ஒன்றாகும்.
7. பணி நிலை
புற்றுநோய்க்கு முதன்மை காரணமாக இருக்கும் பணியிடங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார குறைபாடுகளை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. பணியிடங்களில் இருக்கும் பல்வேறு விதமான இரசாயனங்கள் காரணமாகவும் புற்றுநோய் தூண்டப்படும்.
8. புகையிலை
புற்றுநோயை வர வைக்கும் குணம் கொண்ட புகையிலையை சாப்பிடுவது உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. புகை பிடிப்பவாகள் அவற்றை உள்ளிழுப்பதை குறைக்க வேண்டும் மற்றும் பிற வடிவங்களில் புகையிலையை மெல்லுபவர்களும் அவற்றை குறைக்க வேண்டும். இதன் மூலமே புற்றுநோயை குறைக்க முடியும்.
9. நார்ச்சத்துக்கள்
நம்முடைய உணவு முறையை நாகரீகமாக மாற்றியுள்ளதும் புற்றுநோயை வரவழைக்கும் காரணங்களில் ஒன்றாக உள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் செரிமாண உறுப்புகள் பாதிக்கப்படும். எனினும், கோதுமை மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த அபாயங்களை குறைக்க முடியும்.
====================
No comments:
Post a Comment