Wednesday, 25 June 2014

இந்த தாக்குதலை நிறுத்த முடியுமா?

 source: india.lankasri.com
பூனை குடும்பத்தை சேர்ந்த சிறுத்தை, தற்போது இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன. 
சிறுத்தைகள் சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும், மேலும் மணிக்கு 58 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது.
மேலும், பாரமான இரையையும் தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறும் ஆற்றலை உடைய சிறுத்தைகள், மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியதாக உள்ளது.
சிறுத்தை, தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
உருமறைப்பு திறன் அதிகம் பெற்றுள்ளதால், இந்தியாவில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் அருகிலேயே சிறுத்தைகள் இயற்கையுடன் இயைந்து, மறைந்து வாழ்கின்றன.









இந்தியாவில் ஆண்டுதோறும் சிறுத்தைகள் மறைந்திருந்து ஏற்படுத்தும் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment